எழுத்தாளர் சங்கத்தில் பதவி ஏற்ற முதல் நாளே sixer அடித்த இயக்குனர் சேரன்.
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை வாசிக்கச்செய்து, தேர்வுச் சான்றிதழை வழங்கியவர்.. திரையுலகில் கணக்கிலடங்கா எழுத்துச் சாதனைகளைச் செய்த நம் மூத்த உறுப்பினரும், எதிரணியில் தலைவர் வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தவருமான மதிப்பிற்குரிய திரு.வி.சி.குகநாதன் அவர்கள். தேர்தல் அதிகாரி திரு. உமாசங்கர் பாபு அவர்களின் முன்னிலையில்.. தலைவராக திரு.சேரன், பொதுச் செயலாளராக திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளராக திரு.ஆர்.சுந்தர்ராஜன்…

