துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது….

