Cinenewstime

வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

“வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கதையின்நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி மற்றும் மெல்வின் டேவிட் , சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். பிரேம்ஜி இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் விதுஜீவா. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments)   – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas)   சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான்,…

Read More

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் காணக் கிடைக்கும்  விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக்…

Read More