திரைப்படங்களில் சாக்லேட் பாயாக நடித்து வந்த வி எழுத்து நடிகர், சமீப காலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஆரம்பத்திலிருந்தே திருமணத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இதனால் அவருக்கு பிடித்த நடிகையுடன் பல வருடங்களாக ரகசியமாக லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக இவர்களது உறவு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு வெளியே சுற்றும் புகைப்படங்களை பகிரங்கமாகவே இருவரும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருவதால் மற்ற நடிகைகளை போலவே கோலாகலமாக திருமணம் செய்து கொள்ள அவருக்கு ஆசை வந்துவிட்டது.
இதனால் கடந்த சில நாட்களாக நடிகை வி எழுத்து நடிகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்து இருக்கிறார். ஏற்கனவே நடிகர் நடிகையுடன் சேர்ந்து வாழ துவங்கும் போதே, திருமணம் செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் என்னுடன் இருக்கக் கூடாது. எனக்கு திருமணத்தில் சுத்தமாகவே நம்பிக்கை இல்லை.
பிடிக்கும் வரை இருக்கலாம், சலிப்பு தட்டியதும் அவரவர் வேலையை பார்த்துவிட்டு சென்று விட வேண்டியது தான் என பச்சையாகவே வாய் கூசாமல் நடிகையிடம் கண்டிஷன் போட்டு தான் அவருடன் சேர்ந்து வாழ துவங்கினாராம். ஆனால் நடிகைக்கு வி எழுத்தின் நடிகருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதனால் தான் இப்போது நடிகை நடிகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார்.இப்படி ஒரு எண்ணம் நடிகைக்கு வந்த பிறகு நடிகர் நடிகையுடன் பேசுவதை கூட தவிர்த்து விட்டாராம். திருமணம் வேண்டாம் என்பதில் நடிகர் திட்டவட்டமாக இருக்கிறார். பாவம் அந்த நடிகை தான் நடிகர் ஆரம்பத்தில் போட்ட கண்டிஷனை மறந்து விட்டார். தேவை இல்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்ட நடிகை இப்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.