நடிகர் விஜய்யோட மேனேஜரா இருப்பவர் ஜெகதீஷ். அதே விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார்.
இவிய்ங்க ரெண்டு பேருமே விஜய்யின் தளகர்த்தர்களாக இருந்து அவர் எண்ணியதைச் செயலாக்கத் துடிப்பவய்ங்க. இதனால் இருவர் மீதும் விஜய்க்குப் பெரும் அன்பு -ன்னு சொல்வாய்ங்க.
ஆனா இப்போ மேற்படி இருவருக்குள்ளும் கடும் மோதல் நடந்து வருதாம். இதனால் இருவரும் மாறி மாறிப் புகார் சொல்லிக்கொண்டிருப்பதால், யாருக்காகப் பேசுவது? என்று விஜய் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
உயர்மட்ட அளவில் கிசுகிசுக்கப்படும் இத்தகவலுக்கு என்ன காரணம்? என்பதும் மெல்லிய குரலில் பகிரப்படுது.
அது என்ன?
அடுத்தடுத்த படங்களில் அசுர வளர்ச்சி பெற்றுவரும் இயக்குநர் லோகேஷ்கனகராஜ், கார்த்தி, விஜய், கமல் ஆகியோரைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தையும் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுது. இந்தப்படத்தைத் தயாரிக்க விரும்பிய லலித்குமார், இயக்குநர் லோகேஷ்கனகராஜிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து அவரோடு சேர்ந்து ரஜினியை ஒப்புக்கொள்ள வைக்கத் திட்டமிட்டிருந்தாராம். அதற்கு லோகேஷ் கனகராஜும் சம்மதம் சொல்லிவிட்டாராம்.
இதையறிந்த ஜெகதீஷ், இந்தப்படம் லலித்குமாருக்குப் போய்விடக்கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்து அந்தப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டாராம்.
மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பு, லியோ படத்தின் தயாரிப்பு என படிப்படியாக வளர்ந்து வரும் லலித்குமார், அடுத்து ரஜினி படத்தைத் தயாரிக்கலாம் என்று மகிழ்ந்திருந்த நேரத்தில் அந்தப்படத்தை வேறொரு நிறுவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்ட ஜெகதீஷால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம் லலித்குமார்.
திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் இந்த கிசுகிசு உண்மையா? பொய்யா? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.