பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ராங்கி திரைப்படங்களில் நடித்தமைக்கான இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை நடிகை திரிஷா வழங்கப்பெற்றார். இந்த விருதை த்ரிஷாவுக்கு LEO இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார். இதற்காக பிஹைண்ட்வுஸ்க்கு நன்றி சொன்ன த்ரிஷா, குந்தவை தமக்கு ஸ்பெஷலனா கேரக்டர் என்றும் தெரிவித்தார்.
LEO UPDATE – TRISHA
தொடர்ந்து விஜய் குறித்து பேசியவர், “அனைவருமே கேட்டிருந்தார்கள் விஜய்யும் நீங்களும் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டார்கள். ரொம்ப ஆசையா இருக்கு என்றார்கள். ஏனென்றால் நாங்கள் நான்கு படங்கள் நடித்துவிட்டோம். லோகேஷ்க்கு நன்றி. ஆனால் அந்த 4 படம் மாதிரி இது இருக்காது; இது வித்தியாசமா இருக்கும். அதே சமயம் அந்த கெமிஸ்ட்ரி (விஜய் & த்ரிஷா இடையிலான) மாறாமல் இருக்கும்!” என்று பேசினார்.