நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரா திகழ்பவர் சர்வானந்த். கோலிவுட்டிலும்ல் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் நடிச்சார். இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றுச்சு.

போன மே மாசம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுச்சு.

வரும் ஜூன் 3-ம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (மே 28) காலை நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது சர்வானந்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து,

இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு காயம் ஏற்பட்டு, உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

இந்த விபத்து குறித்து சர்வானந்த் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *