கொஞ்சம் கமர்சியல் ஹிட் கொடுத்து வரும் ஆக்டர் லிஸ்ட்டில் இருக்கும் சிம்பு படங்கள் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், கமல் தயாரிக்கும் படமாவது சுமூகமாக ஆரம்பித்து முடியும் என்று நினைத்துக் கொண்ட ரசிகர்களுக்கு செம ஷாக்கிங்காக ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது.
அதாவது நடிகர் சிம்பு வைத்து ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரிச்சார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக ஹெலிகாப்டர் எல்லாம் வைத்து சாகசம் செஞ்சார். மேலும், ஓடாத அந்த படத்தின் டைரக்டர் கவுதம் மேனனுக்கு புல்லட் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகலை என்பதால் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் உள்ளிட்ட 3 படங்களில் சிம்பு வேல்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணப் போவதாக ஒப்பந்தம் போட்டார்.. கூடவே தன் யுனிவர்சிட்டி சார்பில் சிம்புவுக்கு டாக்டர் பட்டமெல்லாம் கொடுத்தார்..
இந் நிலையில், பத்து தல, கமல் படம் என வேல்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்கை அவர் மீறியதாக தற்போது புகாருடன் தயாரிப்பாளர் சங்கத்தில் ஐசரி கணேஷ் முறையிட்டுள்ளாராம்..
வழக்கமா யாராவது முறையிட்டா கண்டுக்காத புரொடியூசர்கள் கவுன்சில் இப்போ கமல் தயாரிப்பையே முடக்க முடிவெடுத்துள்ளனர்
தமிழ் தயாரிப்பாளர்கள் மூன்றாக பிரிந்து வலுவிழந்ததை உதயநிதி தலையிட்டு சீர்தூக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.. முன்னரே சத்யஜோதி தியாகு நடப்பு சங்கத்தில் இருந்து விலகிட்டாருன்னு சேதி வந்துச்சு.ஆனா அது நெசமான்னு தெரியலை.
ஆனாலும் இப்போ ஏற்கெனவே லைகா, ஏஜி எஸ் நிர்வாகிகள் பலத்துடன் உள்ள ஜூனியர் இராம நாராயணன் டீம் மீண்டும் சிம்புவை சீண்டிப் பார்க்க ஆயத்தமாவதா சேதி.