கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழா அபுதாபியில் நடந்து முடிஞ்சுது. இதில் கோலிவுட் பாலிவுட், திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனை ஏ. ஆர் ரகுமான் நடிகர் கமலஹாசனுக்கு வழங்க அவர் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, இந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில், ராக்கெட்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்குவதாக இருந்த நிலையில், அவர் விலகியதால் மாதவனே இந்த படத்தை இயக்க முடிவு செய்தார். அதோடு மட்டும் இன்றி, இப்படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
மாதவன் சிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே… அதே போல் தன்னுடைய முதல் இயக்கத்திலும் சிறந்த இயக்குனர் என பெயர் எடுத்து விட்டார்.