சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதை படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தற்போது விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் கேரளா தியேட்டர் ரைட்ஸ் ரூபாய் 15 கோடிக்கும் மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் கேரளா தியேட்டர் ரைட்ஸ் வெறும் 4 கோடிக்கு தான் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.