16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் (FLAG)திரைப்படம்…

ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃபிளாக்

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்..

140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வை ஒரு சிறுவன் மூலம் சொல்லும் திரைப்படம் தான் ஃபிளாக்

இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர், இசை ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் , படத்தொகுப்பு வரதன்..

இப்படத்தில் புகழ் பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கிய கதாபத்தில் நடித்திருக்கிறார், இவருடன் இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷ் ஆக நடித்த தீஹான் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் இவர்களுடன் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கே சாமி, பாபுஷா மற்றும் பலர் நடத்துனர்..

இப்படம் 140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை தூண்டிவிடும் திரைப்படமாக இருக்கும் இதற்கு சான்றாக தான் நேற்றைய பொழுது இப்படத்திற்காக 16வது தாதாசாகெப் பால்கே விருதை பெற்றோம்..
இந்த விருதை என் கையால் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி என்றார்..

இந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மேலும் ஒரு நிகழ்வாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி ஆகிய மொழியில் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் இப்படத்தின் டெய்லரை அவர்களின் மொழியில் வெளியிட்டனர்.

மேலும் இத்திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதையும் தட்டி வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்…

oj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *