சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50-ஆவது படத்தை, அவரே டைரக்ட் பண்ணி நடிக்க உள்ளாராம். அவ்வபோது இந்த படம் குறித்த தகவல்களும் வெளியாகி வருது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்படுது. அதுபோல் இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
துஷாரா விஜயன் தனுஷுக்கு சிஸ்டராகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்குது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும் நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த தகவலை மறுத்து வாராய்ங்க..
ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில், இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தனுஷின் ஐம்பதாவது படத்திலும் இவர்களின் ஜோடி தொடருமா? என்பது எதிர்பார்ப்பை கிளப்பி இருக்குது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகலை.