நடிகர் சிவகார்த்திகேயன் தனது தந்தையின் 70-வது பிறந்தநாளையொட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், ” நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்த்திகேயன் என்று சொல்வது தான் பேரழகு. மேலே புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளைக் கதைத்தார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ். கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சூப்ரெண்ட்டாக பணிபுரிந்த போது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார்.
என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலைச் செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலையான பிறகு அந்த நபர் வெளியில் வரும்போது முதுகலை பட்டம் பெற்றிருந்தார். அதற்குக் காரணம் ஜி.தாஸ் அவர்கள்.
கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலைப் பார்த்து அவர்களைப் பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவைக் கொடுத்து மகிழ்ந்தவர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவச் செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவார். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா” என சொல்லி இருக்கார்