மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது விளையாத் புத்தா என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது மறைந்த மலையாள இயக்குனர் சாச்சியின் கனவு திரைப்படமாகும். ஏற்கனவே சாச்சி இயக்கத்தில் அய்யப்பனும் கோஷியும்,டிரைவிங் லைசன்ஸ் திரைப்படங்களில் நடித்திருந்த பிருத்விராஜ், தற்போது அவரின் கனவு திரைப்படமான விளையாத் புத்தா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விளையாத் புத்தாப் படத்தை ஜெயன் நம்பியார் என்பவர் டைரக்ட் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களுக்கு மேலாக மரையூரில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் நடைபெற்று வருகிறது. நடிகர் பிருத்விராஜும் கலந்துகொண்டு நடிச்சு வந்தார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நடிகர் பிருத்விராஜ் அந்தரத்தில் பறந்தபடி சண்டையிடுவது போன்ற ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது இதற்காக ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இந்த காட்சி எடுக்கப்பட்ட்டது இந்த காட்சியில் டூப் எதுவும் போடாமல் நடிகர் பிருத்விராஜ் ரிஸ்க் எடுத்து நடிச்சார்.
இதில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது , இதையடுத்து வலியால் துடித்த நடிகர் பிருத்விராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தி உள்ளார்களாம்.அறுவை சிகிச்சை செய்தால் குறைந்தது 2 மாதங்களாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி உள்ளார்களாம். இதனால் விளையாத் புத்தா படத்தின் படப்பிடிப்பு பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. நடிகர் பிருத்விராஜ் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்களாம் .
GET WELL SOON #PRITHIVRAJ