சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.
2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.