MAAMANNAN திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுடன் பேசிய சபரீசன்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சபரீசன் செய்தியாளர்களிடம் ஃப்ரண்ட்லியாக பேசியதன் மூலம் எதிர்காலத்தில் இவரது நேரடி அரசியல் வருகையும் உறுதி செய்வது போல் தெரிகிறது.
நேற்று சபரீசனை மீட் செய்த மீடியாக்களிடம் சிரித்த முகத்துடன் உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் இன்னும் சொல்லப்போனால் நடிக்க வேண்டாம் எனவும் தனது மைத்துனரை சபரீசன் கேட்டுக்கொண்டார்.
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் அரசியலில் இன்னும் பல சிகரங்களை அவர் எட்டுவார் எனவும் சபரீசன் மனமார வாழ்த்தவும் செய்தார். நடிப்பதை கைவிட முடிவெடுத்த போது உதயநிதி ஸ்டாலின் வருத்தப்பட்டார் என்றும் ஆனால் இப்போது தனக்கிருக்கும் மக்கள் பணிகளால் அந்த வருத்தம் அவருக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தை தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும் படப்பிடிப்புக்கு மட்டும் சென்றிருப்பதாகவும் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் முழுக்க முழுக்க அரசியல்வாதியாக் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை தான் சபரீசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எப்போதுமே பிரஸ்மீட் என்றால் அதை தவிர்க்கக் கூடிய சபரீசன் நேற்றைய தினம் மறுப்பு ஏதும் சொல்லாமல் பொறுமையாக பதில் அளித்துவிட்டு சென்றது தான்.