மொத்த உயிரினங்களும் உயிர் வாழ நீர், காடுகள், மலைகள் என இயற்கை வளங்களே இன்றியமையாத தேவைகளாகும். கடலை திருடி, மலையை திருடி இப்போது மண்ணை திருடும் காலத்திற்கு வந்திருக்கிறது காலம் இதை ஒன் லைன் நாட்டாக வைத்து தமிழ் சினிமாவில் விவசாயிகளுக்காக உருவாகியிருக்கும் படைப்பு “விவசாயி எனும் நான்’.
இந்த படத்தில் கதை நாயகர்களாக அண்ணன், தம்பியான பூவரசன், புகழேந்தி அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு நாயகிகளாக அக்ஷிதா, புவனா நடிக்கிறார்கள். பருத்திவீரன் படத்திற்கு பிறகு சரவணன் கேரியரில் மிக முக்கியமான படம் இது. அதேபோல வேலாராமமூர்த்திக்கும் மிக முக்கியமான கேரக்டர்.
சேலம், ஆத்தூர் பகுதிகளில் ” விவசாயி எனும் நான்” படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
மிகுந்த பெருட்செலவில் எடுக்கப்பட்ட “விவசாயி எனும் நான்” விவசாயிகளின் துயரங்களை சொல்ல ஆகஸ்டில் திரைக்கு வர இருக்கிறது.
ஒளிப்பதி மகேந்திரன்
இசை நரேஷ்
எடிட்டிங் ராம்நாத்
ஆர்ட் மோகன்
பாடல், வசனம் கி.வே.ராமன்
எழுத்து
இயக்கம்
தயாரிப்பு
பொ.பச்சமுத்து