ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள ‘ரத்னம்’ ஏப்ரல் 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள வியாழக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கு படிப்புக்கு உதவி செய்யப்பட்டது.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்…

“ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை. இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு பண்ணியிருக்கிற‌ படம் இது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். அடுத்த வாரம் படம் வருது, உங்கள் எல்லோருக்கும் இது பிடிக்கும். என் மாப்பிள்ளை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் என் குடும்பத்துக்கு என் நன்றிகள்.”

இன்வீனியோ ஆரிஜன் நிறுவனத்தின் சார்பில் அலங்கார் பாண்டியன் பேசுகையில்…

“ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் உடன் எங்களோட இரண்டாவது கூட்டணி இது. ‘ஜிகர்தண்டா 2’ அடுத்து இப்போ ‘ரத்னம்’. எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோ விஷால். ஹரி சார் அவருடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக‌ பெரிய வெற்றி கொடுக்கும் என்று நம்புறோம். அனைவருக்கும் நன்றி. “

ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் சி.ஜே. பேசியதாவது…

“விஷால் என்னுடைய 6 வருட கால நண்பர், அவருடன் படம் செய்ய வேண்டுமென பேசிக்கொண்டிருந்தோம், அந்த நிலையில் தான் அவர் ஹரி சாரை அறிமுகப்படுத்தி படம் செய்யலாம் என்றார். இந்த மாதிரி ஒரு வெற்றிக்கூட்டணியில் இணைவது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். இப்படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் எம் சுகுமார் பேசுகையில்…

” ஹரி சார் இதுவரையில் இல்லாத வகையில் கடுமையாக உழைத்திருக்கிறார். சிங்கிள் ஷாட்டில் ஒரு விஷ‌யம் செய்துள்ளோம், பாருங்கள் பிடிக்கும். விஷால் சார் எப்போதும் எனர்ஜியாக எத்தனை டேக் போனாலும் அசராமல் செய்வார். விஜய் சாருக்கு பிறகு, விஷால் சாரிடம் தான் இவ்வளவு எனர்ஜி பார்க்கிறேன் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.”

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில்…

“ஹரி சார் கூட முதலில் ‘பூஜை’, இது மூணாவது படம். விஷால் கூட முதல் படம் ‘சண்டைக்கோழி’ இப்பவும் அவர் சண்டைக்கோழி தான். அவ்வளவு எனர்ஜி. இந்தப்படத்தில் ஒரே ஷாட்டில் ஒரு ஆக்சன் சீன் கேட்டார். அதற்காக ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்தோம், அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். ஹரி சார் படங்கள் பரபரப்பாக இருக்கும் இந்தப்படம் எல்லாப்படத்தையும் விட பரபரப்பாக இருக்கும்.”

நடன இயக்குநர் தினேஷ் பேசுகையில்…

“ஹரி சார் ‘சாமி’ டைமில் இருந்து அவரது படத்தில் ஒரு பாடலானது பண்ணி விடுவேன். பயங்கர ஸ்பீடாக வேலை பார்ப்பார். ‘சாமி’, ‘அருள்’, ‘பூஜை’ முதல் இப்போது வரை அவர் வேகம் குறையவே இல்லை. விஷால் சாரை ‘செல்லமே’வில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சகோ சமுத்திரகனி இதிலும் நடித்துள்ளார். விஷால் சார் முதல் படத்தில் டான்ஸில் தடுமாறினார் ஆனால் அடுத்த படத்திலேயே அசத்தினார்.

தேவி ஶ்ரீ பிரசாத் சாரை ஸ்கூலிலிருந்து தெரியும். அவரது மியூசிக்கில் நிறைய தெலுங்குப்படம் செய்துள்ளேன். ‘ரத்னம்’ படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. எனக்கு இந்தப்படம் ரொம்ப கம்ஃபர்டபிளாக இருந்தது, மிக அட்டகாடமாக வந்துள்ளது. படம் உங்களுக்கு பிடிக்கும், நன்றி.”

பி வி ஆர் சார்பில் மீனா பேசுகையில்…

“விஷால் எப்போதும் உண்மையானவர், அடுத்தவருக்காக நிற்பார், அவருக்காக இங்கு இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் பங்குகொள்வது மகிழ்ச்சி.”

நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது…

“மகிழ்ச்சியான தருணம். இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல். ஹரி அண்ணன், தம்பி விஷால் எல்லாரும் நெருக்கமானவர்கள். ஹரி அண்ணனிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். உழைப்பு, உழைப்பு அயராத உழைப்பு. விஷால் என் தம்பி. தயாரிப்பாளர் கார்த்திக் அவர்களிடம் இருக்கும் உண்மை எனக்குப் பிடிக்கும். ஹரி அண்ணனும் நானும் ஒரே ஸ்கூல், அவர் கூப்பிடார் வந்துவிட்டேன். விஷாலுடன் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது, அது நடந்தால் பெரிதாக பேசப்படும். இந்தப்படம் தீ மாதிரி வேகமாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.”

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியதாவது…

‘ரத்னம்’ பட டீமிற்கு நன்றி. தேசிய விருது பாராட்டுகளுக்கு என் நன்றிகள். ஹரி உடன் நிறையப் படம் வேலை செய்துள்ளேன். ‘ஆறு’ படத்தில் ஆரம்பித்து இப்போ 6வது படம். கதை எழுதி ஒரு படம் உருவாவது எல்லாமே ஒரு இயக்குநர் கையில் தான், அவரால் தான் நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம். ஹரி எனக்கு குடும்பம் மாதிரி. அந்த உறவு தான் எங்கள் பாடல்களில் பிரதிபலிக்கிறது. இந்தப்படம் அவர் படத்தில் இருந்து வித்தியாசமாக இருந்தது. விஷால் சாருடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு வேலை செய்கிறேன் அதுவும் எங்களுக்குப் பிடித்த‌ ஹரி சார் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மிக அன்பானவர், அவருக்கு நன்றி. சமுத்திரக்கனி சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருமே இந்தப்படத்தில் கலக்கியுள்ளனர். சிங்கிள் ஷாட்டில் ஆக்ஷ‌ன் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். எப்படி செய்தார்கள் என்றே தெரியவில்லை. இது தான் மிகப்பெரிய சிங்கிள் ஷாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன், பிரமிப்பாக இருந்தது. இசையமைப்பாளராக நான் ரொம்பவும் எஞ்சாய் செய்தேன். ஹரி சார் ஸ்பீட் அவரது சிந்தனையிலேயே இருக்கிறது. அவர் படத்தில் இது எனக்கு பிடித்த படம். விஷால் சார் இதில் கலக்கியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும், நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

தமிழ் சினிமாவில் படு பயங்கர ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்த ஹரி சார் இயக்கியுள்ள ‘ரத்னம்’ படத்தின் டிரெய்லரே அவ்வளவு நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக மிகப்பெரிய‌ வெற்றியாக இருக்கும். விஷால் சார் இரண்டு நாள் முன்னாடி ஒரு இண்டர்வியூ தந்தார், அது தான் இப்போது வைரல். அவர் படத்திற்கு பிரச்சனை வரும் என்றார் ஆனால் இப்படம் அதைத்தாண்டி பெரிய வெற்றி பெறும். விஷால் சாருக்கு ஒரு வேண்டுகோள், மார்க் ஆண்டனி 100 கோடி அடுத்து 300 கோடி படம் தரனும், அரசியல் வேண்டாம், இதை வேண்டுகோளாக வைக்கிறேன். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெற்றிப்படம் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதை உடைத்து இந்தப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் படமாக அமைய வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது…

‘தாமிரபரணி’ மிகப்பெரிய ஹிட், ‘பூஜை’ செம்ம ஹிட். இந்த இரண்டு படங்களையும் நான் ஏரியா விநியோகம் செய்துள்ளேன். சினிமாவில் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது வெற்றிதான். விஷால் கடுமையாக உழைப்பார், அவர் உடம்பில் நிறைய தழும்புகள் இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

இயக்குநர் ஹரி பேசியதாவது…

“இது எனது 17வது படம், விஷாலுடன் மூன்றாவது படம். விஷால் தயாரிப்பாளர் கார்த்திக்கை அறிமுகப்படுத்தினார், அந்த கம்பெனியில் கார்த்திக் சுப்பராஜ் இருந்தார், ஒரு இயக்குநர் இருக்கும் கம்பெனியில் வேலை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இந்தப்படம் இந்தக்கால ஆடியன்ஸுக்கு பிடிக்கும் வலையில் 60% ஆக்சன் 40% கமர்ஷியலாக இருக்கும். விஷால் ஆக்ஷ‌ன் செய்வார், ஆனால் எமோஷனிலும் அசத்தியுள்ளார். எல்லா ஆர்டிஸ்டும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். சிங்கிள் ஷாட் பற்றி எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில் எட்டு சீக்குவன்ஸ், நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் செய்துள்ளனர். எனக்கு எதார்த்தம் இருக்கனும்னு ஆசைப்படுவேன், ஏன் வைத்தார் என யாரும் கேட்கக் கூடாது. அந்த எண்ணத்தில் தான் உழைத்து உருவாக்கியுள்ளோம். 3.5 கிமீ தூரத்திற்கு நான்கு இடங்களில் மாறி மாறி ஹீரோ ஹீரோயினோடு போய் ஆக்ஷ‌ன் செய்துள்ளார், இது செய்யவே முடியாது என்றார்கள். வெற்றிமாறன், ரஞ்சித் எல்லாம் ராவாக தருகிறார்கள். அது மாதிரி செய்ய ஆசைப்பட்டேன். விஷால் உழைத்து தந்தார். அனைவரும் ஒத்துழைப்பு தந்தனர். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து மூன்றாவது ஷாட்டில் எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. ஆடியன்ஸை மதித்து படம் எடுத்துள்ளோம். பார்க்கும் போது உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். நன்றி.

நடிகர் யோகிபாபு பேசியதாவது…

ஹரி சாருடன் ‘யானை’ படத்தில் வேலை பார்க்கும் போது அவரது படங்களை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பேன். யோகி உழைப்பு தாண்டா ஜெயிக்கும் என்பார். அவர் இன்னும் நிறையப்படங்கள் செய்ய வேண்டும். விஷால் சார் என்றும் மாறாதவர், அறிமுகமானதிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி பழகுகிறார். தேவி ஶ்ரீ பிரசாத் சார் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார். சமுத்திரக்கனி அண்ணா எப்போதும் எனக்கு நல்லது நினைப்பவர். தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் ஸ்டோன் பெஞ்சுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

நடிகர் விஷால் பேசியதாவது…

இந்த மேடையை அமைத்து தந்த உங்களுக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி. உங்களால் இந்தப் பயணம் சாத்தியமானது. ‘ரத்னம்’ ஏப்ரல் 26 ரிலீஸாகிறது. நாளை அதை விட முக்கியமான நாள் ஓட்டுப்போட வேண்டிய நாள். நகரத்தில் தான் வாக்குப்பதிவு கம்மியாக இருக்கும் அது மாற வேண்டும். சினிமாவை வேண்டுமானால் அடுத்த வெள்ளிக்கிழமை தள்ளிப்போடலாம், ஆனால் ஓட்டு அப்படி கிடையாது. ‘ரத்னம்’ பற்றி சொல்ல வேண்டும். ‘மார்க் ஆண்டனி’ எனக்கு புதிய கதவைத் திறந்தது, 100 கோடி வசூலால் மரியாதை கிடைத்துள்ளது. அந்தப்படம் ஆதிக்கிற்கு ஒரு வாழ்க்கையை தந்துள்ளது. ஹரி சார் சொல்வது மாதிரி எதுவானாலும் காது கொடுத்து கேட்க வேண்டும் நம்மை பற்றி என்ன சொல்வார்கள் என நல்லது கெட்டது எல்லாவற்றையும் கேட்க வேண்டும். என் வீட்டில் என் அப்பா என் பெயர் வந்தாலே, அந்த பேப்பரை கட் பண்ணி வைத்து விடுவார். என் அம்மா ஹரி சாரின் தீவிர ரசிகை. எப்போ ஹரி சார் கூட படம் செய்வாய் எனக் கேட்பார். ‘மார்க் ஆண்டனி’க்கு பிறகு, பழைய விஷாலை பார்க்க முடியவில்லை என்று சொன்ன போது, ஹரி சார் கூட படம் பண்ணலாம் என சொன்னார்கள். நானே அவருக்கு போன் பண்ணி நான் சார் நாம் படம் பண்ணலாம் என்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். மூன்றாவது படம் எனும் போது எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது, உடனே இதைப்பண்ணலாம் என்றேன். சரியான தயாரிப்பாளராக ஸ்டோன் பெஞ்ச் வந்தார்கள், ஜீ ஸ்டூடியோஸ் வந்தது. எல்லாம் நன்றாக அமைந்தது. ஹரி சார் எப்போதும் ஹீரோவுக்கு முக்கியம் கொடுப்பார். அதே நேரம், அவர் ஒவ்வொரு படத்திலும், ஒரு பெண்மணிக்கு முக்கிய பாத்திரமாக வைப்பார். அது மிகப்பெரிய விஷ‌யம். சமுத்திரகனி அண்ணன் உண்மையிலேயே அண்ணன். அவர் ஒரு கதை சொல்லியுள்ளார், அது படமாவதற்காக தான் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். யோகிபாபு மிகச்சிறந்த நண்பர், அவர் வீட்டில் எப்போதும் என் வீட்டில் இருப்பது மாதிரி இருப்பேன். சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு ஷாட் 5 நிமிடம் நினைத்தே பார்க்க முடியாது, அதை கேட்டு செய்கிறார். சுகுமார் அதை அட்டகாசமாக எடுத்துள்ளார். என் டார்லிங் கனல் கண்ணன், என்னை நல்லா ஆக்ஷ‌ன் ஹீரோ என சொல்லக் காரணமே அவர் தான். எனக்கு 100 தையல் அதற்கு பாதி காரணம் அவர் தான், அவர் அமைத்த காட்சி படத்தில் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். கேப்டன் சொன்ன மாதிரி, நான் என்ன சாப்பிடுகிறேனோ அதே தான் கடைசி லைட் மேன் வரைக்கும், அதை கடைசி வரை கடைப்பிடிப்பேன். நான் பேசுவது பிரச்சனையாகிறது என்கிறார்கள் ஆனால் நான் என் படத்திற்காக பேசவில்லை. தனஞ்செயன் சார் சொன்னாரே ஒரு சின்னப்படம் வருகிறது என்று, அதற்காகத்தான் போராடுகிறேன். சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, சினிமா எல்லோருக்குமானது யார் வேண்டுமானாலும் வரலாம், அவ்வளவு தான். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகனும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். இந்தப்படம் ஹரி சாரின் உழைப்பு, அவர் யுனிவர்ஸில் நாங்கள் வேலை பார்த்துள்ளோம் உங்களுக்கு எண்டர்டெயினர் காத்திருக்கிறது, நன்றி.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *