சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் நடிகர் கோபி காந்தி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு உள்ள அறிக்கை செய்தியில் கூறி உள்ளதாவது. நடிகர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சமூக சேவையாற்ற வேண்டும் என்று பல்வேறு காலாட்டங்களில் வலியுறுத்தி வந்துள்ளேன். தற்போது விஜய் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியை துவக்கி மக்களுக்கு சமூக சேவை செய்வதாக கூறியுள்ளார். மேலும் விஜய்க்கு பேர், புகழ் வழங்கிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சாதி, மதமற்ற, லஞ்சமற்ற நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், அரசியல் தொழிலல்ல புனிதமான பணி, யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். விஜய் கூறியது போல் செயல்பட்டால் கண்டிப்பாக தமிழக மக்கள் மனதில் காமராஜர், எம்.ஜி.ஆர் போல் நீங்கா இடம் பிடிக்க முடியும், தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டு மேலும் தமிழக அரசியலில் சமுக சேவையில் சாதனை படைக்க வேண்டும் என கடவுளை வணங்கிக் கொள்வதாக சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி வெளியிட்டு உள்ள அறிக்கை செய்தியில் தெரிவித்துள்ளார்.