தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் 18.06.2023 (காலை) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2021 –2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு கணக்கிற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
. 2015 முதல் 2022 வரையில் வெளியான சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு மானியத்தொகை வழங்கிடவும், ,2016 முதல் 2022 வரை வெளியான திரைப்படங்களின் நடிகர் நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள வழங்கிடவும் குழு அமைத்து அரசாணை பிறப்பித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் செய்திவிளம்பரம் மற்றும் தமில்வளர்சிதுறை அமைச்சர் மாண்புமிகு. மு. பெ.சாமிநாதன் அவர்களுக்கும் பொதுக்குழு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
20 வருடங்களாக புதுபிக்கப்படாமல் இருந்த தயாரிப்பாளாகள் சங்கத்தினை பதிவுத்துறையில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிகொள்ள பையனுாரில் இடம் வழங்கப்பட்டது. அதனை தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் புதுப்பிக்க உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுதுறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களுக்கும் பொதுக்குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாசத்தலைவர் டாக்டர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களின் 100 வது ஆண்டு விழாவை கலை நிகழ்ச்சி நடத்தி சிறப்பாக்கிட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது
2013 – 2014ஆம் ஆண்டுகளில் மானியத்தொகைக்காக விண்ணப்பித்த திரைப்படங்களில் விடுபட்ட திரைப்படங்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசின் கொண்டு செல்லவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரைபடம் தயாரிக்கும் தயாரிப்பாளர் முதலாளி -அந்த முதலாளியை அவமதித்தும் குளறுபடி செய்யும் நடிகர்களுக்கு இனி தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரைப்படம் வெளியான அன்றைய தினமே திரைப்படங்களின் விமர்சனங்களை மோசமாக ஒளிபரப்பு செய்யும் நபர்கள் மீது கண்டிப்பாக தொழில் ரீதியாகவும் சட்டரீதியாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திரையங்கு உரிமையாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு, மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் ஐந்து நடிகர்களை வைத்து படம் துவங்குவதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்பு கொண்ட பிறகு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நடிகர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
கூட்டத்தில் தலைவர் என்.இராமசாமி, துணைத்தலைவர்கள் தமிழ் குமரன், அர்ச்சனா கல்பாத்தி, செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், இணை செயலாளர் சௌந்தரபாண்டியன்,
செயற்குழு உறுப்பினர்கள்
தேவயாணி, சுபாஷ் சந்திரபோஸ், சித்ராலட்சுமணன், அழகன் தமிழ் மணி, மனோஜ்குமார், அன்புதுரை, மாதேஷ், ஷக்தி சிதம்பரம், திருமலை, எச்.முரளி, எம். கபார், அம்பேத்குமார், விஜயமுரளி, பி.டி.செல்வகுமார், டில்லிபாபு, ஏ.எல்.உதயா, ஜோதி, சுரேஷ், பழனிவேல், பிரவின்காந்த், பைஜாடாம், செந்தில்குமார், கமலகண்ணன், ராமசந்திரன், செந்தாமரைகண்ணன், நீல்கிரீஷ் முருகன்,
சிறப்பு செயற்குழு அழைப்பாளர்கள் சாலை சகாதேவன், பன்னீர்செல்வம், ஜெயசீலன், ரஞ்சித்குமார், தாய் சரவணன், செல்வராஜ், கருணாகரன், ஜி.எஸ்.முரளி, ராஜா (எ) பக்ரூதின் அலி
மற்றும் வி.சி.குகநாதன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், ஏ. எஸ்.பிரகாசம், கலைப்புலி ஜி.சேகரன், கே.எஸ். சீனிவாசன், ஞானவேல், அரிராஜன், ஜே.எஸ்.கே.
உட்பட 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.