கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தற்போது கெட்டப்பை மாற்றி வரும் வாரமாக இந்த வாரம் உள்ளது. ஏற்கனவே தனுஷ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த நிலையில் சியான் விக்ரம் ’தங்கலான்’ படத்தை முடிந்தவுடன் வேற லெவல் கெட்டப்பில் உள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடிகர் சூரி தனது கெட்டப்பை மாற்றி எடுத்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் காமெடி நடிகராக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் சூரி தற்போது ஹீரோவாகும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’விடுதலை’ படத்தின் முதல் பாகத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் ’கொட்டுக் காளி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ஸ்டைலிஷ் ஆன லுக்கில் இருக்கும் சில புகைப்படங்களை நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ’நலமே சூழ்க்’ என்ற கேப்ஷனையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ’டக்குனு பார்த்தால் ராம்சரண் மாதிரி இருக்கிறார்’ என்றும் ’நீங்கள் ஹீரோ மாதிரி இல்லை ஹீரோவை தான்’ என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது