RED CARD for Simbhu
தமிழ் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு நேத்திக்கு சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுத்துள்ளனர்.
சங்கத்திற்கு அவ்வளவு பவர் இருக்கா?
மற்ற தயாரிப்பாளர்கள் சங்கங்களின் ஒத்துழைப்பும், Fefsi – யின் ஒத்துழைப்பும் இருந்தால் இது சாத்தியமாகும்.