ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய ரஜினிகாந்த், ‘குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும். குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். ‘குடிப்பழக்கம்’ எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்.
நீங்க குடிக்கிறதால அம்மா, பொண்டாட்டினு குடும்பத்துல இருக்குற எல்லோருடைய வாழ்க்கையும் பாதிக்கப்படுது.
காட்டுல சின்ன மிருகங்க எப்பவும் பெரிய மிருகங்கள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும்.
உதாரணத்துக்கு காக்கா எப்பவும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும்.
ஆனா, கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும். பறக்கும் போது கழுக பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும்.
இருந்தாலும் காக்காவால அது முடியாது. ஆனா, கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்ட முடியாத உயரத்துல பறந்துக்கிட்டே இருக்கும்.
உலகின் உன்னதமான மொழி ‘மெளனம்’தான்!. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை
இப்ப இல்ல 1977 லயே
அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன்.
ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாரு. சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாரு. அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன்.
ஆனா, ரஜினி பயந்துட்டாருன்னு சொன்னாங்க.
நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான்.
ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல.” என்றார்