LEO / THALAIVAR 171
leo LEO படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171. முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையமைக்க அன்பு அறிவு ஸ்டண்ட் கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
IMAX
இந்நிலையில், லியோ படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ், தலைவர் 171 படத்தின் தகவல்களை பகிர்ந்துள்ளார். தலைவர் 171 படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சியை IMAX கேமராவில் எடுக்கபோவதாக கூறியுள்ளார்.
லியோ படத்தை நார்மல் கேமராவில் எடுத்து IMAXல் மாற்றியிருக்கிறோம். ஆனால், தலைவர் 171 படத்தில் இடம்பெறும் குறிப்பிட்ட காட்சியை IMAXல் எடுக்கமுடிவு செய்துள்ளோம். லியோ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து மனோஜ் பரமஹம்சா தான் தலைவர் 171 படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் IMAX கேமராவில் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை, இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது படுவைரலாகி வருகிறது.