
இயக்குநர் அட்லீ, விஜய் சேதுபதி மற்றும் படக் குழு உறுப்பினர்களுக்கு ஷாருக்கான் ட்விட்டர் மூலம் நன்றி.
ஷாருக்கான் ஜவான் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், படத்தின் இயக்குநரான அட்லீயை, ”யூ ஆர் ட மேன்!!!’ என தெரிவித்திருக்கிறார். ஷாருக்கான் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜவான் படத்தின் உற்சாகமான பிரிவ்யூவை வெளியிட்டார். இது தேசம் முழுவதும் தீயாக பரவியது. உயர்தரமான ஆக்சன் அதிரடி காட்சிகள்.. ஷாருக்கானின் வெல்ல முடியாத வசீகரம்… மற்றும் ஏராளமான உணர்வுகளால் நன்கு பதிக்கப்பட்ட பிரிவியூவானது, ஜவானின் அசாதாரணமான உலகத்தை பார்த்து, ரசிகர்கள் தங்கள் அன்பையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர். இதனால்…