பெண்ணியவாதிகளை அவதூறாய் பேசும் “பெமினிஸ்ட்” டீசர் – Feminist

பெண்ணியவாதிகளை அவதூறாய் பேசும் “பெமினிஸ்ட்” டீசர்
நேற்று மாலை 5 மணிக்கு, எழுத்தாளர் இயக்குனர் கேபிள் சங்கரின் இயக்கத்தில்

´´லாக் டவுன் கதைகள்” எனும் தலைப்பில் வெளிவர இருக்கும் வெப் சீரீஸின் முதல் எபிசோடான “பெமினிஸ்ட்”டின் டீசரை பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான சி.வி.குமார், எழுத்தாளர் பொன்.விமலா, நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டார்கள்.
இதில் துரோணா, ஏஞ்சலின் ப்ளோரா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பு : சிவா. ஆர். மற்றும் கேபிள் சங்கர் எண்டர்டெயின்மெண்ட். டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பெண்ணியவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. அதற்கு காரணம் இதில் வரும் ஒரு வசனம்.

“பெமினிஸ்ட் என்றால் ஒண்ணு அவங்களை யாராவது வச்சிருப்பாங்க. இல்லை இவங்க யாரையாவது வச்சிருப்பாங்க”” என்று முடிகிறது.

எது எப்படியோ டீசருக்கே பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கும் கேபிள் சங்கர் படத்தில் என்ன என்ன வச்சிருக்காரோ என்று பேச்சு.

கேபிள் சங்கர்னாலே 1008 கருத்து சொல்வார்லன்னு ஒரு கருத்து இருக்குல்ல… பாப்போம்… என ஆண்களும் படத்திற்காக ஆவலாய் காத்திருக்கிறார்கள்…!

இதோ அந்த டீசர் லிங்க்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *