கோவையை சேர்ந்த தர்ஷாவுக்கு நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம். சென்னையில் வந்து வாய்ப்பு தேடியவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
எனவே, சீரியல் பக்கம் ஒதுங்கினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளை தேடி வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி இவருக்கும் வாய்ப்பு கொடுத்தது.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சிரியல்களில் நடித்து சின்னத்திரையிலும், மேலும், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்
சீரியலில் நடித்துக்கொண்டே இருந்தால் சினிமாவில் நுழைய முடியாது என கணக்குப்போட்டு சீரியலுக்கு குட்பை சொன்னார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய மொக்கை படங்களில் நடித்தார்.
தற்போது ‘மெடிக்கள் மிராக்கிள்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறார்.