நா.முத்துக்குமாரின் பிறந்தநாளுக்காக சீமானின் உருக்கமான கடிதம்
நா.முத்துக்குமார் அவர்களைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவருமான ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் – சீமான் அவர்கள் முத்துக்குமார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்தது:- பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே எங்களோடு நெருக்கமானவன் முத்து. அறிவுமதியின் அறையில் நாங்களெல்லாம் ஒன்றுகூடுவோம்.அந்த சமயத்தில் வந்த இலக்கியங்கள், பாடல்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவான். அவனது தந்தை தமிழாசிரியர் என்பதால் இலக்கிய ஆர்வம் சிறிய வயதிலேயே அவனுக்கு அதிகமிருந்தது. பட்டாம்பூச்சி…

