
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய ‘ருத்ரன்’ திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர்…