‘VD12’ – Vijay devarkonda படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா, ஸ்ரீ லீலா நடிக்கும் ‘VD12’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது! டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்ஷன் திரில்லர் கதைக்காக‘ஜெர்சி’ புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VD12’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்….