ஏற்கனவே ,.எல்லா சினிமா தரப்பினரின் வெறுப்புக்கு பெயர் போன மாறன் தற்போது கொலை படத்தினை ரிவியூ என்ற பெயரில் மிக மோசமாக விமர்சித்த காரணத்தால் தயாரிப்பாளர் கஜாலி மிக காட்டமான கேள்வியை ,மாறனுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் விடுத்துள்ளார்
“விஜய் ஆண்ட்டனி எப்போதும் மொக்கப் படத்தில்தான் நடிப்பார். இதுவாவது நல்ல படமா இருக்கும்னு நம்பிப் போனதுக்கு அவர் பண்ணினது கொலை.
இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் இந்தப் படத்துக்குப் போனீங்கன்னா அதுக்குப் பேருதான் தற்கொலை.”
மேற்கண்ட பதிவு மாறனின் விமரிசனம்.
ஒரு சாதாரண தனி மனிதன் இப்படி ஒரு படத்தைப் பற்றி விமரிசித்துப் ‘படத்துக்குப் போகாதீங்க’ என்று படம் வெளிவந்த ஒரு நாளில் சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்?
கொலை படம் என்ன பொதுச் சொத்தா? சில தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டிருக்கும் தனிப்பட்டவர்களின் சொத்து. அந்த வியாபாரத்தைக் கெடுக்க எவனுக்கும் உரிமை இல்லை. அதிகாரம் இல்லை.
ஆனால் நம் சங்கம் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறது என்பதுதான் அதைவிட வேதனை.
ரெண்டு பேரைத் தட்டித் தூக்குங்க. மத்தவங்க தானே அடங்குவாங்க.
அதிகாரமில்லாத செயல்பாடுகளும்
செயல்படாத அமைப்பும் வீண்.
இந்த பூனைக்கு பலர் மணி கட்ட முயற்சித்தும் பலன் இல்லாத போது இப்போது கஜாலி பெரிய மணியை கட்டி இருக்கிறார்,..பார்க்கலாம்..!