பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தநிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பள விவரம் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய கமல்ஹாசன், தற்போது 7வது சீசனை தொகுத்து வழங்க ரூ.130 கோடி சம்பளம் பேசி உள்ளதாகக் கூறப்படுது.
முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த கமல்ஹாசன் ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓ.கே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.