‘லால் சலாம்’ LAL SALAM படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங் நிறைவு.
ஜெயிலருக்குப் பிறகு, நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்திருக்கும் அடுத்த படம் லால் சலாம். லைகா புரொடக்ஷன்ஸ் பேனரில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஜானர் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு குறித்து பரபரப்பான அப்டேட்டை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் படக்குழுவினரின் புகைப்படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். “உங்களுடன் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது ஒரு அதிசயம் மற்றும் நீங்கள் ஒரு பூர்மேஜிக் அப்பா” என்ற தலைப்புடன் அப்டேட்டைப் பகிர்ந்துள்ளார்.