கடைசி தோட்டா படத்தில் சுருட்டு பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக மிரட்டும் வனிதா விஜயகுமார்!
ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகும் கடைசி தோட்டா படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மர்டர் மிஸ்டரி ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அதிரடியான காவல்துறை அதிகாரியாக நடிக்கும் வனிதா விஜயகுமார், சுருட்டு பிடித்துக்கும் மிரட்டலான மற்றும் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடைய இந்த கதாபாத்திர வடிமைப்பும், அவருடைய அதிரடியான நடிப்பும் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ராதாரவி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், அவரது வேடமும் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோல், நடிகர் வையாபுரி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும்.
வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது, இரண்டுமே மிகப்பெரிய வரவேற்பை பெறும் பாடலாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சீட் நுணியில் உட்கார வைக்கும் மர்டர் மிஸ்டரி திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது .