லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘லியோ’.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் மீண்டும் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா’ என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தம் தெறிக்க, கையில் சுத்தியுடன் விஜய் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். பனி படர்ந்த மலைகள் பின்னணியில் உள்ளன. கூடவே, In the WORLD Of Untamed Rivers, Calm Water Either Become Divine GOD or Dreaded DEMONS என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது.
இதன் பொருள், “கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அமைதியான நீர், தெய்வீகம் நிறைந்த கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக உருமாறும்” என்பதாகும்.
லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் இன்று வெளியாகயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.