ஜூன் 23 முதல் உலகமெங்கும் கபடி ப்ரோ (KABADI BRO ) திரைப்படம் வெளியீடு


சின்ன சின்ன தில்லு முல்லுகளை செய்து வாழ்க்கையை ஒட்டி வரும் கபடி வீரன் வீரபாகுவின் (சுஜன் ) கதை .அவனுக்கு பக்க பலமாக அவனது நண்பர்கள் அர்ஜெண்ட் முத்துவும் (சிங்கம் புலி ),சக்தியும் (சஞ்சய் வெள்ளங்கி )உள்ளனர் .இவர்கள் மூவரும் பாயும் புலி எனும் கபடி அணி வைத்து அந்த பகுதியின் சாம்பியன்களாக உள்ளனர் .இந்நிலையில் வீரபாகுவும் அந்த ஊரின் காவல்துறை அதிகாரி இசக்கி பாண்டியனின் (மதுசூதன ராவ் ) மகள் அபிராமியும் (பிரியா லால் )காதல் கொள்கின்றனர்.

KABADI BRO

தன்னுடைய மாமா மகளை மணம் முடிப்பான் என்று வீட்டில் எதிர் பார்த்த நிலையில் நண்பனின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அபிராமியை மணக்க முற்படுகிறான் .அவனது பித்தலாட்டங்கள் வெளியே தெரிய வர இசக்கி பாண்டியனின் கோபத்துக்கு ஆளாகிறான்.அபிராமியும் அவனை நம்ப மறுக்கிறாள்.இசக்கி பாண்டியன் வீரபாகுவை தண்டிக்க கபடி போட்டியை தேர்ந்தெடுக்க அதில் நேர்மையை வெல்ல உறுதி கொள்கிறான் .பின்பு நடந்தது என்ன ..? போட்டியிலும் காதலிலும் வீரபாகு வென்றானா என்பதே கதை .

நடிகர்கள் -சுஜன் ,பிரியா லால் ,சிங்கம்புலி ,சஞ்சய் வெள்ளங்கி ,மதுசூதன ராவ் ,ஹானா ,மனோபாலா ,சண்முக சுந்தரம் ,ரஜினி M ,மீரா கிருஷ்ணன் ,அஞ்சலி ,சிசர் மனோகர் ,சங்கர்.

Story,screenplay,dialogue,direction – Sathish Jayaraman
Producer- ANJHANA CINEMAS -USHA SHATHISH
Camera -E .Krishnasamy
Music-A J Daniel
Lyrics-gnanakaravel ,Thamarai
Choreography –Nobel,Rathika
Art –K A Raghava Kumar
Editing –S P Ahamad
PRO –SIVAKUMAR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *