பார்வதி நாயரின் அதிரடி கவர்ச்சியில் “ஒன் பிளஸ்”

கவர்ச்சி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி இருக்கிறது “ஓன் ப்ளஸ்”.நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், GOAT, கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் சமீபத்தில் SUN NXT OTT-யில் வெளியான “உன் பார்வையில்” ஆகிய படங்களில் நடித்த “பார்வதி நாயர்” அதிரடி கவர்ச்சியில் கலக்கியுள்ள புதிய படம் “ஒன் ப்ளஸ்”. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கியுள்ள வித்யாசாகர் தற்போது ‘ஒன் ப்ளஸ்’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார். பார்வதி நாயருக்கு ஜோடியாக புதுமுக நாயகன் தேஜா மற்றும் ரிஷி, யுவிகா ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் ஷரவணசுப்பையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறிய படங்களின் வெற்றி தற்போது தமிழ் திரை உலகில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நம்பிக்கை ஊட்டும் படைப்பாக அனைத்து அம்சங்களுடன் இந்த கோடையில் வெளியாக இருக்கிறது ‘ஒன் ப்ளஸ்’. இப்படத்தை J&J VISUALS சார்பில் K.V.ஜெயராம் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு : S.மோகன், இசை : விஜய்சங்கர்.Bsc Dft, படத்தொகுப்பு : A.K.நாகராஜ், நடனம்: S.L.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் : S.M.ராஜ்குமார், Special Effects : சிவா (Red Fox).

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வித்யாசாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *