Roll Time Studios தயாரிப்பில் புதிய திரைப்படமான “𝗠𝗔𝗗𝗗𝗬” இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார்.
படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குனராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்து நடிகர் சூரி ரோலிங் சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் சொல்லி படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.
இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்.முக்கியமாக இளைஞர்களை கவரும் திரைப்படமாக உருவாகிறது.
திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், கதை விவரங்கள், மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.





