Super deluxe telungu
விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீமேக் செய்து ரிலீஸ் ஆகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 400 திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.
தெலுங்கில் இந்த வாரம் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் இந்த படத்தின் ரீமேக் ரிலீஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் தெலுங்கு திரை உலக ரசிகர்களுக்கும் பிரபலமானவர்கள் என்பதால் தற்போது இந்த படம் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படம் விரைவில் தமிழ்நாட்டிலும் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.