பிரம்மாண்டமாக தொடங்கியது ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி திரைப்படமான ‘சூர்யாவின் சனிக்கிழமை’

நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயா இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் திரைப்படமான ‘அந்தே சுந்தரனிகி’ முழு நீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருந்தாலும், இரண்டாவது படைப்பான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஒரு தனித்துவமிக்க அதிரடி மற்றும் மாஸான ஆக்சன் அவதாரத்தில் நானி வழங்கிய அன்செயின்ட் Unchained எனும் வீடியோ மக்களை உற்சாகப்படுத்தியது. டி வி வி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.‌

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனும் திரைப்படம் இன்று பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் தயாரிப்பாளர் டி வி வி தனய்யா படத்தின் திரைக்கதையை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.‌ முதல் ஷாட்டிற்கு தில் ராஜு கேமராவை சுவிட்ச் ஆன் செய்து தொடங்கி வைக்க, இயக்குநர் வி. வி. விநாயக் கிளாப் போர்டு அடிக்க, எஸ். ஜே. சூர்யா இயக்கினார்.

ஒரு பிரத்யேக ஜானரிலான கதைகளில் மட்டும் நடிப்பதில் நானி தன்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அவரும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் நானி முரட்டுத்தனமான தோற்றத்தில் நடிக்கிறார்.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன், பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் பட தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்பது பான் இந்திய திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *