மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம்

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், பிரமாண்டமான அம்மன் சிலை அலங்காரம், அக்கினி சட்டி என மிகப் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது!

கே பாக்யராஜ், பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பி.ல்.தேனப்பன், ரவிமரியா, பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், கோதண்டம், சூப்பர் குட் சுப்பிரமணியம், சூரிய பிரபா, ஸ்னாசி தமிழச்சி திவ்யா ஆகியோர் கலந்துக் கொண்டு சரக்கு படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் கதாநாயகன் மன்சூர் அலிகானை பாராட்டி பேசினார்கள்!

வழக்கமான இசைத் தட்டு வெளியிடாமல், பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றி, விழாவை நிறைவு செய்தனர்!

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மூலம் பிரமாண்டமான திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, சரவண சுப்பையா, சேசு, அனுமோகன், பாரதி கண்ணன், ஆடுகளம் நரேன், தீனா, லொள்ளு சபா மனோகர், வினோதினி, சசி லயா, டி.எஸ்.ஆர், மதுமிதா, வலினா, மோகன்ராம், மூசா, ரெனீஸ், நிகிதா, கூல் சுரேஷ், நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கர், கோமாளி சரவணன், பபிதா என 40-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பரபரப்பான பாடல்களை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வருகிறது “சரக்கு”!

@GovindarajPro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *