நடிகர் ரகுமான் எண்பது 90 காலகட்டங்களில் பிஸியான கதாநாயகனாக நடித்து வந்தவர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் 16 என்கிற படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக துவங்கினார்.
இவரது நடிப்பில் அதே கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று என்கிற படம் அடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ரகுமான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள சமரா என்கிற திரைப்படம் சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் பரத் மற்றும் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி, சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சார்லஸ் ஜோசப் என்பவர் இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சார்லஸ் ஜோசப் பேசியதாவது…. ஃபேமிலி செண்டிமெண்ட்டுடன் அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லர் படமாக இதை உருவாக்கியிருக்கிறோம்.
விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ரகுமான், பரத் இணைந்து நடித்திருப்பது படத்திற்கு பெரிய பலம்”என்று கூறியுள்ளார்.
சமாராவின் ஸ்டைலிஷ் ஆன பரபரப்பான ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது
@rahman_actor
@bharath_niwas
@c_j_charles
@Mksubhakarn
@anuj.varghese @iamsanjana.dipu
@binojvillya @Rahulmadhab @govindkrishnaofficial
@cheersnofears @veeraryan21 @dineshlamba09
@sonalisudan @sinu_sidharth
@mirsarwar
@devanand.nair
@deepakwarrier
@samaramovie
@Tinijvillya
@Tomscott @viviyasanth @bisalprasanna
@magicframes2011 @tseries.official @bring_forth
@obscura_entertainment