MARISELVARAJ – vazhai
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.
தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார். ‘வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
https://twitter.com/Udhaystalin/status/1682482215173906433?s=20