பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீதேவா. ரோகிணியை மையமாக வைத்தே கதை நகரும் நிலையில் அந்த ரோகிணியின் கணவர் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவா நடித்து வருகிறார். இவரின் கதாபாத்திரத்தை தினசரி பலரும் ரசித்து வருகின்றனர். இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று கூட ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஏற்கனவே சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கால் பதித்த அவர், அஜித்தின் துணிவு மற்றும் ரஜினியின் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான சுப்பன் திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் வசூல் மன்னன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இதனை சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்



